கார் ஓடும் பெண்களை எரிக்கப் போவதாக அச்சுறுத்தியவர் கைது!

கார் ஓட்டும் சவுதிப் பெண்களை காரோடு எரிப்பதாக ஒருவர் வீடியோ மூலம் அச்சுறுத்தியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

சவூதி இராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக டுவிட்டர் செய்தி மூலம் உள் துறை அமைச்சு அறிவித்துள்ளது . இந்தக் கைது வெள்ளியன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது .

இந்த வாரம் செவ்வாயன்றுசவூதி அரசு , பெண்கள் காரோட்ட இருந்த தடையினை நீக்கியதை, அதிகமானவர்கள் இங்கு வரவேற்றிருந்தார்கள் .

சவூதி நாட்டு ஆண்கள் அணியும் கால்வரை நீளும் வெள்ளை ஆடையை அணிந்திருந்த இவர்  இணையத்தில் சிறிய காணொளியில் தோன்றி கார்களை எரிப்பதாக பயமுறுத்தி இருந்தார்.

இந்த வீடியோக் காட்சி எந்த அளவுக்கு உண்மையானது என்பதை ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை..

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இருபது வயதைத் தாண்டியவர் என்றும் , ஆளுநரின் கட்டளையின் பேரிலேயே கைது செய்யப்பட்டார் என்றும் பிராந்தியப் பொலிஸ் பேச்சாளர் கூறியிருக்கிறார் .

உலகிலேயே மிக மோசமான கார் விபத்துக்கள் சம்பவிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இங்கு, பெண்கள் கார் ஓடத் தொடங்குவதால் விபத்துக்களை குறைக்க முடியுமென உள்துறை அமைச்சு கூறி உள்ளது .

பெண்களுக்கு கார் ஓட்டத் தடை விதித்த உலகின் ஒரேயொரு நாடாகத் திகழ்ந்த சவூதி அரேபியாவில், இத் தடை 2018ஜூனில் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவது இ;ங்கு குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்