இலங்கைக்கு ஏற்பட்ட பெரும் நட்டம் – 9 ஆண்டுகளில் 18 பில்லியன் மாயம்! முழு விபரம் உள்ளே

கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மிஹின்லங்கா விமான சேவை சுமார் ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த விமானசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

9 வருடங்களைக் கடந்த நிலையிலும் ஒருபோதும் இலாபத்தை ஈட்டவில்லை என்றும், கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை 17.27 பில்லியன் ரூபா நட்டத்தையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த 9 ஆண்டுகால நிதி செயற்பாடுகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. அவற்றை நோக்குவோம்…

2006 – 2007 காலப்பகுதியில் 195 மில்லியன் ரூபாய்…

2007 – 2008 காலப்பகுதியில் 3161 மில்லியன் ரூபாய்…

2008 – 2009 காலப்பகுதியில் 1300 மில்லியன் ரூபாய்…

2009 – 2010 காலப்பகுதியில் 1221 மில்லியன் ரூபாய்…

2010 – 2011 காலப்பகுதியில் 940 மில்லியன் ரூபாய்…

2011 – 2012 காலப்பகுதியில் 1968 மில்லியன் ரூபாய்…

2012 – 2013 காலப்பகுதியில் 3293 மில்லியன் ரூபாய்…

2013 – 2014 காலப்பகுதியில் 2592 மில்லியன் ரூபாய்…

2014 – 2015 காலப்பகுதியில் 1406 மில்லியன் ரூபாய்…

2015 – 2016 காலப்பகுதியில் 1196 மில்லியன் ரூபாவையும் மிஹின்லங்கா விமான நிறுவனம் இழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 2012 – 2013 காலப்பகுதில் அதிகளவு நட்டம் பதிவாகி உள்ளது. 9 ஆண்டு காலப்பகுதியில் மொத்தமாக 17.27 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

தொடர் நட்டத்தை அடைந்து வந்த மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ஒக்ரோபர் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்