நீதிமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்த பொலிஸ் அதிகாரி!

குற்றவாளியின் குழந்தைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய சீனாவின் ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 4 மாத குழந்தையின் தாயும் ஒருவராவர்.

வழக்கு நடந்த சமயம் குழந்தையை, பெண் பொலிசான ஹாவோ லினாவின் பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார்.அப்போது குழந்தை சத்தமாக அழத்தொடங்கியது. எவ்வளவோ சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

உடனடியாக,  பொலிஸ் அதிகாரியான ஹாவோ லினா, குழந்தைக்கு பால் கொடுக்கத் தொடங்கினார்.இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி, பலரும் அவரின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் கடமையை காட்டிலும் மனித நேயத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என ஹாவோ லினா கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்