பங்களாதேஷ் நோக்கி வந்த ரோஹிங்கியா அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!! 50 பேரை காணவில்லை!

மீண்டும் மயன்மாரிலிருந்து பங்களாதேஷ் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் படகொன்று,  நேற்று வியாழனன்று கவிழ்ந்ததில்,  19பேர் கொல்லப்பட்டுள்ளமை பங்களாதேஷ் பொலிசாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

.இந்தச் சம்பவத்தில் 50 பேருக்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகள் தொகையுடன்,  இடம்பெயர்ந்தவர்கள் மொத்தத் தொகை அரை மில்லியனைத் தாண்டுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா சபையின் அமெரிக்க தூதுவர்,   மியன்மாருக்கு ஆயுத விநியோகம் செய்யும் நாடுகளை ஆயுத விநியோகத்தை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.

இப்பொழுதுதான் முதல் தடவையா,க  அமெரிக்கா  மயன்மாரின் இராணுவத் தலைவர்களை தண்டிக்கும்படி பகிரங்கமாக கோரியிருக்கின்றது.

ஆனால் ஒபாமா காலத்தில் அமுலில் இருந்த தடையை மீண்டும் அமுல்படுத்தும் அளவுக்கு அமெரிக்கா பயமுறுத்தல்களை கொடுக்கவில்லை . பங்களாதேஷ் கடலுள்  நேற்று வியாழன் இரவு , பலத்த காற்றும் , அதன் விளைவாக எழுந்த பேரலைகளும்,  அகதிகள் பயணித்த படகைக் கவிழ்த்துள்ளன.

கவிழ்ந்த படகில் 130 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 27 பேர் இதுவரையில் உயிரோடு மீட்கப்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்