சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த தல டோனி செய்த காரியம் ?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டோனி, விக்கெட் கீப்பராகவும்  துடுப்பாட்ட வீரராகவும்  பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

அண்மையில் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்த நிலையில், துடுப்பாட்ட வீரராக மற்றுமொரு மைல்கல்லை டோனி எட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருந்த போது ஆபத்பாந்தவனாக வந்த டோனி, அரைசதம் அடித்து இந்திய அணி 250 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

88 பந்துகளில் 2 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 79 ஓட்டங்களை சேர்த்து தோனி ஆட்டமிழந்தார். நேற்றைய அரை சதம், சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் உட்பட ஒட்டுமொத்தமாக 100 அரைச் சதங்கள் என்ற மைல் கல்லை அவர் எட்டினர்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய 14வது வீரர் டோனி ஆவார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது.

இதையடுத்து செப்டம்பர் 21ம் திகதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் மற்ற வீரர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க டோனி அப்படியே கீழே படுத்துவிட்டார்.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடர் வெற்றியால் இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர்.

அப்போது அவர்களை கூல் செய்ய மைதானத்திலேயே குப்புற படுத்தவர்தான் டோனி.

கூலிங்கிளாசை அணிந்தபடி டோனி படுத்திருக்க, அருகே சக இளம் வீரர்கள் அமர்ந்துள்ள புகைப்படம் பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய வீரர்கள் இப்படித்தான் ரிலாக்ஸ் செய்கிறார்கள் என்று சொல்கிறது படத்துக்கான கப்ஷன்.

டோனியின் வெற்றி ரகசியமே இப்படி படுத்துவிடுவதுதான் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்