ஆபிரிக்க தேசத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கும் சிவன் ஆலயம்!

பொதுவாக தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இந்துக் கோவில்கள் அமைந்துள்ளமை நாம் அறிந்தவையாகவே இருக்கின்றன.ஆனால், ஆபிரிக்க நாடான, போட்ஸ்வானாவின் தலைநகர், காபரோனில் இந்துக் கோயில் ஒன்று அமைந்துள்ளது.காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே, உள்ள எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம், இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலினுள் நுழைந்தவுடன் நவகிரகங்கள் உள்ளன.கோயிலின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது.

சிவபெருமானை சுற்றி சுப்பிரமணியர், பார்வதி, விநாயகர் சிலைகள் அமைந்துள்ளன.கோயில் சுவர்களில் சிறு குகைகள் போல அமைக்கப்பட்டு அதில், இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.சிவலிங்கத்திற்கு முன்னால், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.கோயிலின் உட்பகுதியில் பெரிய மண்டபம் ஒன்றும் காணப்படுகின்றது.
அதில் ராமர், சீதா, லட்சுமணன், அனுமான் சிலைகளும் உள்ளன.மேலும், வள்ளி, தெய்வானையுடன் முருகன், லட்சுமி, பத்மாவதியுடன் வெங்கடேஸ்வரர் சிலைகளும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்