யாழில் அனைத்து ஆடம்பர வசதிகளுடனும் திறக்கப்பட்ட நவீன ஹோட்டல்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் The Thinnai என்ற அதி சொகுசு ஹோட்டல் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

ஓய்வெடுப்பாற்கு முழுமையான சூழலை கொண்ட வகையில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் காணப்படும் ஹோட்டல் தேவையை இது நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்ட நிர்மாணிப்பு முகாமைத்துவத்தை திருநெல்வெலி ப்ரோபர்ட் டெவலோபர்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு பிரதேசத்தின் சுற்றலாடல், பொருளாதாரம் மற்றும் அங்கு மக்களின் வாழ்க்கை நிலைமையை அதிகரிப்பதற்கு சேவை செய்வது இந்த உள்ளூர் நிறுவனத்தின் முயற்சியாகும்.

இந்த ஹோட்டல் அமைந்துள்ள சுழல் மனதிற்கு நெருக்கமான வகையில் அமைந்துள்ளதுடன் யாழ் குடா நாட்டின் பல பிரசேங்களில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு தேடுவதற்காக இங்கு I love green என்ற திட்டமும் செயற்படுத்தபடுகின்றது.

ஹோட்டலுக்கு பயன்படுத்தப்படும் பால், பழங்கள் மற்றும் மரக்கறிகள் உட்பட அனைத்து உணவும் ஹோட்டலுக்கு சொந்தமான பண்ணையில் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவானோருக்கு தொழில் வாய்ப்புக்களையும் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்