ஆலயத்திற்கு சென்ற மக்களை சோதனை செய்த பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பாடு!

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவிற்குச் சென்றவர்களை வழிமறித்து அவர்களுக்கு அசௌகரியங்களை கொடுத்ததாக போக்குவரத்து பொலிசார் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியயிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நேற்று மாலை வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா, இராசேந்திரகுளம் அம்மன் ஆலயம் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குள் அமைந்திருக்கின்றது.

மூன்றாம் நாள் திருவிழாவான நேற்றைய தினம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் அருகில் அமைந்திருக்கும் ஆலயத்திற்கு வேட்டிகள், சாறிகளை அணிந்து சென்ற போது சிலர் மோட்டர் சைக்கிள் ஆவணங்களை எடுத்துச் செல்லவில்லை. இன்னும் சிலர் தலைக்கவசம் அணியாதும் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த ஆலயத்தை அண்மித்த நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்டபகுதிக்குள் வந்து நின்ற உலுக்குளம் பகுதிக்குரிய போக்குவரத்து பொலிஸார் அவ்வீதி வழியாக ஆலயத்திற்குச் சென்ற மக்களை வழிமறித்து அவர்களது மோட்டர் சைக்கிள் ஆவணங்களை பரிசோதித்ததுடன், ஆவணங்கள் இன்றியும், தலைக்கவசம் இன்றியும் பயணித்தவர்களுக்கு தண்டப் பணம் எழுதியுள்ளார்கள்.

இதேவேளை, அப்பகுதியின் ஊடாக சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கவசம் இல்லாமல் பயணித்த போது அவர்களுக்கு குறித்த பொலிசார் கைகாட்டி அனுப்பி வைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆலயத்திற்குச் சென்ற பக்தர்கள் ஒன்று கூடி பொலிசாருடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டனர்.

இதேவேளை, அண்மையில் நெளுக்குளம் பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற போது வீதியில் கடமையில் நின்ற உலுக்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்திய போது அது நெளுக்குளம் பொலிஸ் பிரிவு. நாம் வர முடியாது எனக் கூறிய அவர்கள், தற்போது மட்டும் நெளுக்குளம் பிரிவுக்குள் வந்து எப்படி எம்மை அச்சுறுத்தலாம் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இங்கு தவறு செய்வது யார்? , பொலிஸா? பொதுமக்களா ??

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்