கடந்த மூன்று நாட்களாக கடலில் காணாமற்போன மீனவர் பாதுகாப்பாக மீட்பு!

வல்வெட்டிதுறை கடற்பரப்பிற்கு நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் 10 இற்கும் மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதுடன் இன்று கடல் தொழில் சங்கங்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கை மிகவும் தீவிரமாக இடம்பெற்றது.

இந்நிலையில் மீனவர் சென்ற படகின் பெற்றோல் முடிவடைந்த நிலையில் வேறு இடத்தில் கரையொதுங்கியதாகவும், தற்பொழுது அவரை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டித்துறை கொண்டை கட்டை பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய வடிவேலு சிறீகாந் என்ற மீனவர் வல்வெட்டிதுறை கடல் பரப்பில், தூண்டில் தொழில் மேற்கொள்ள நேற்றுமுன்தினம் பிற்பகல் படகில் தனியாகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்