இலங்கை மருத்துவரின் திறமையைக் கண்டு வியந்து போன வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியம் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவத்தை திறம்பட மேற்கொள்ளும் இலங்கை வைத்தியர் ஒருவர், வெளிநாட்டவர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.நாட்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியரான தெதெதுரு ஷாந்த செனவிரத்ன என்பவரே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார்.

அவரது வீட்டில் தங்கியிருந்து பல்வேறு வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கை மருத்துகள் ஊடாக பல தொற்று நோய்களையும் இவர் குணப்படுத்துவதனாலேயே இவ்வாறு வெளிநாட்டவர்களிடம் இவர் பிரபலமடைந்துள்ளார்.

எலும்பு முறிவுகள், நரம்புகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கும் அவர் தரமான மருந்துகளை கண்டுபிடித்து நோயாளிகளை குணப்படுத்தித வருகின்றார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்