இலங்கையுடனான வெற்றியை இரண்டு வயதுக் குழந்தையுடன் ஜாலியாக ஆடி மகிழ்ந்த விராட் கோஹ்லி !!

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியை அனைவருக்கும் ஒரு ஆக்ரோஷமான, இளம் துடிப்பான வீரராக மட்டுமே தெரியும்.

ஆனால் கோலிக்கு இன்னொரு ஜாலியான முகமும் உள்ளது. ஒவொருவரும் தமது வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளும் வெற்றியை ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். சிலர் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து மது அருந்தி கொண்டாடுவார்கள். சிலர் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரத்தை செலவழித்து மகிழ்வார்கள்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடும் ஒருவர்.அண்மையில் முடிவடைந்த இலங்கை இந்திய அணிகளிற்கிடையிலான டெஸ்ட் தொடரின் வெற்றியை சக வீரர்களுடன் நீச்சல் தடாகத்தில் நீச்சல் அடித்து கொண்டாடி மகிழ்ந்தார்.

இலங்கை இந்திய அணிகளிற்கு இடையில் தற்போது ஒரு நாள் போட்டித்தொடர் இடம்பெற்று வருகின்றது.முதல் நான்கு போட்டிகளிலும் இலங்கை அணியை மண் கவ்வச் செய்து கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை தம் வசமாக்கியுள்ளது.

இந்த ஒருநாள் தொடரின் வெற்றியை விராட் கோலி இந்திய அணியின் வீரர் மொஹமட் ஷமியின் இரண்டு வயதுக் குழந்தையுடன் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளார்.

இந்தக்காணொளியை மொஹமட் ஷமி தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். வீராட் கோஹ்லி ஷமியின் மகளுடன் சேர்ந்து நடனம் ஆடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்