முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கோட்டையில் சாதனை படைத்த யாழ் மங்கை!

இலங்கையின் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையைப் படைத்துள்ளார்.Add New

ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியிருக்கிறார்.

அதன்படி நேற்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகளே பெற்றுள்ளனர்.

இதற்கமைய, ஜே.அனித்தா 3.47 மீற்றர் உயரம்வரை பாய்ந்து முதலாம் இடத்தினையும், விமானப்படையைச் சேர்ந்த எஸ்.பீ.ரணசிங்க 3.20 மீற்றர் உயரம்வரை பாய்ந்து, இரண்டாம் இடத்தினையும் சீ.ஹெரினா 3.00 மீற்றர் உயரம்வரை பாய்ந்து மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோட்டை எனச் சொல்லப்படும் ஹம்பாந்தோட்டையில் உள்ள தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றதோடு, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் அனித்தா சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்