நீண்ட நேரம் தேனீக்களுடன் தனியே இருந்து சாதனை படைத்த கனேடியர்!

இதுவரை எவரும் செய்யாத அளவு நீண்ட நேரம் தனது முகத்தில் தேனீக்களுடன் இருந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் ஜூவான் கார்லொஸ் நோகஸ் ஒறிற்ஸ் என்பவர்.

தேனீக்கள் குறித்து எதுவித பயமும் இன்றி, புதன்கிழழமை ரொறொன்ரோவில் நீண்ட நேரம் இருக்க முடியும் என்பதை நிரூபித்து புதியதொரு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கூக்ஸ் ரவுனில் உள்ள டிக்கி தேனீ தேன் பண்ணையில் ஒரு பணியாளரான ஒறிட்ஸ் தேனி தாடி ஒன்றை அணிந்து 61நிமிடங்கள் இருந்துள்ளார்.யங் மற்றும் டன்டாஸ்சதுக்கத்தில் இச்சாதனையை புரிந்து முன்னைய சாதனையான 53-நிமிடங்கள் 34-செக்கன்ட்களை முறியடித்துள்ளார்.

இந்த சாகசத்திற்கு தேவையான தேனீக்களை Dickey Bee Honey Farm தேனி வளர்ப்பு மாஸ்டரான பீற்றர் டிக்கி வழங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 100,000 தேனீக்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. Blood Honey என்ற திரைப்படத்திற்காக தேனீக்களை டிக்கியின் பண்ணை வழங்கியது.புதன்கிழமை சாகசம் படத்தின் வெள்ளோட்டமாக யங் மற்றும் டன்டாஸில் அமைந்துள்ள சினிபிளெக்சில் செயற்படுத்தப்பட்டது.

கனடா முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட திரையரங்குகளில் குறித்த திரைப்படம் காட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்