ஜனாதிபதியை கண்கலங்க வைத்த சிறுமியின் கண்ணீர்க் கதை!

காணாமல் போனோரின் உறவுகள் இலங்கையின் வடக்கு கிழக்கு எங்கணும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவர்களுக்கு உரிய பதிலை இன்னமும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கின்றது.

இந்த நிலையில் காணாமல் போனோரின் உறவுகள் நாட்டின் பொறுப்புள்ள பதவியிலிருப்போரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தாலும் அரசாங்கம் எதற்குமே செவிசாய்க்காமல் தானும் தன்பாடுமாகத் தன்வேலையைத் தொடர்கின்றது.

தமது பிள்ளைகளை, கணவனை, தந்தையரைத் தேடும் இந்த உறவுகளின் கண்ணீர்க்கதைக்கு முடிவுரை எழுதுவார் யாரோ என்ற நிலையில் அண்மையில் ஒரு சிறுமியின் அழுகை காண்போரைக் கண்கலங்கவைத்துள்ளது.

நாட்டின் உயர்ந்த தலைவர் என்ற வகையில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, தனது அப்பாவை விடுவிக்குமாறு மிக உருக்கமாக கேட்டுள்ளார் குறிப்பிட்ட சிறுமி.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்