இலங்கைக்கு தொடரும் சோகம்! 4வது ஒரு நாள் போட்டியிலும் படுதோல்வி! உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் அபாயம்!

கொழும்பில் நேற்று நடைபெற்ற 4வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் , இலங்கை அணி படு தோல்வியைச் சந்தித்துள்ளது .இந்திய அணியிடம் தொடர்ச்சியாக சந்திக்கும் ஏழாவது தோல்வியாகும் .

ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் , மூன்று ஒருநாள் ஆட்டப் போட்டிகளிலும் இலங்கை அணி தோற்றுள்ளது . வேகப் பந்து வீச்சாளர் மலிங்க தனது 300வது விக்கெட்டை எடுத்துள்ளதால் , இது அவரது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இலங்கை அணி 207ஓட்டங்களுடன் தனது சகல விக்கெட்டுகளையும் இழந்து விட்டது

5 விக்கெட் இழப்புக்கு 375 ஓட்டங்கள் எடுத்துள்ளமை , இலங்கை அணிக்கு எதிராக , இலங்கை மண்ணில் ஒரு நாள் ஆட்டத்தில் அதிகம் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா நிறுவ உதவி இருக்கின்றது .76 பந்துகளில் , இந்திய அணித்தலைவர் கோலி அடித்த சதம் அவரது 29வது சதமாகும் .

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் தோனிக்கு இது 300வது ஒரு நாள் ஆட்டம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதே வேளை இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து லசித் மாலிங்க 300 ஆவது விக்கெட் என்ற மைல் கல்லைக் கடந்தார்.

 

203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை மலிங்க பிடித்துக் கொண்டார்.

இதேவேளை, 30 டெஸ்ட் போட்டிகளலில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன் 67 இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்க 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்