கப்டன் இன்றித் தவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி! 4வது ஒரு நாள் போட்டிக்கு கப்டன் யார்?

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் உபாதை காரணமாக அணித் தலைவராக கடமையாற்றும் சாமர கப்புகெதர விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டிக்கு அணித்தலைவராக செயற்படவிருந்த சாமர கப்புகெதர உபாதை காரணமாக விளையாடமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த அணித்தலைவர் யாரென்பதில் பலத்த சிக்கல் தோன்றியுள்ளது.

இந்திய அணிக்கெதிரான தொடரில் ஹேரத், சந்திமல், தரங்க, கப்புகெதர ஆகியோர் இலங்கை அணியை வழிநடத்தியுள்ள நிலையில் அணியின் அடுத்த கப்டன் யார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்