2019 உலகக் கோப்பை போட்டிகளில் டோனி விளையாடுவதற்கு அதிரடி வீரர் ஷெவாக் ஆதரவு!

2019 உலக கோப்பையில் முன்னாள் கப்டன் டோனி விளையாட முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கப்டன் டோனி. கப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் வீரராக மட்டும் விளையாடி வருகிறார்.

2019 உலக கோப்பை போட்டிக்கான அணியை தயார் செய்யும் பணியில் தேர்வுகுழு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் இலங்கை தொடருக்கு முன்பு சிறப்பாக ஆடாவிட்டாலும், உடல் தகுதியுடன் இல்லாவிட்டாலும் அணியில் நீடிக்க இயலாது என்று டோனியை தேர்வு குழு தலைவர் அறிவுறுத்தி இருந்தார். இதற்காக யுவராஜ்சிங்கும் நீக்கப்பட்டு இருந்தார்.

இலங்கை அணிக்கு எதிராக 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் டோனி மிகவும் அபாரமாக விளையாடி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

இந்த நிலையில் 2019 உலக கோப்பையில் டோனி விளையாட முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

தற்போதுள்ள சூழ்நிலையில் டோனிக்கு மாற்றாக எந்த ஒரு வீரரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை ரி‌ஷப்பன்ட் சிறந்த வீரர்தான். ஆனால் அவர் டோனி இடத்திற்கு வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

2019 உலக கோப்பைக்கு பிறகே அவர் இடம் பெற வேண்டும்.இதனால் உலக கோப்பையில் டோனி ஆட வேண்டும். உலக கோப்பைக்கு பிறகே அவரது மாற்று பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான காலம் வரை ரி‌ஷப்பண்ட் நல்ல அனுபவம் பெற்று விடுவார்.

டோனி சிறந்த ஓட்டங்களை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் நாம் கவலைப்படக்கூடாது. உலக கோப்பை வரை அவர் உடல் தகுதியுடன் இருக்க நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனென்றால் மத்திய வரிசை மற்றும் பின் வரிசையில் ஆடுவதில் அவர் மிகவும் அனுபவம் பெற்றவர். அவருக்கு நிகராக யாரும் இல்லை.

டோனி எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் சவாலை சந்திக்க கூடியவர். அனுபவம்தான் எப்போதும் நெருக்கடியை சமாளிக்க கூடிய திறமையை பெற்றது. அதில் டோனி சிறந்தவர்.இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

டோனி இரண்டு உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் வென்று கொடுத்தார்.

36 வயதான டோனி 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9608 ஓட்டங்களை (257 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். ஓட்ட சராசரி 51.93 ஆகும். 10 சதங்களையும் 65 அரைச் சதங்களையும் டோனி அடித்தள்ளதுடன் சர்வதேநச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்டசமாக 183 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்