இலங்கை கிரிக்கெட்டை நாசம் செய்தது சூதாட்டக்காரர்களே! சீறுகின்றார் அர்ஜுன் ரணதுங்க

உலகக் கிண்ண வெற்­றியின் பின்னர் இலங்கை கிரிக்­கெட்டில் சூதாட்டக்காரர்கள் புகுந்து அணியை நாசம் செய்து விட்டார்கள் என முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;

‘ஒரு தேசம் என்று வந்­து­விட்டால் ஜன­நா­யகம் இருக்­க­வேண்டும். ஆனால் இலங்கை கிரிக்­கெட்டில் ஒரு­நாளும் ஜன­நா­யகம் இருந்­த­தில்லை. மாபியா ஒன்­றுதான் எப்­போதும் இருந்­தது.

அக் காலத்தில் கிரிக்கெட் நிரு­வா­கத்­திற்கு எவரும் வர­மாட்­டார்கள். ஐந்து பேரைக்­கூடத் தேட முடி­யாது. பணத்தைக் கண்­டதும் பலர் புகுந்துவிட்டனர்.தற்­போ­தைய அணியின் நிலைமை குறித்து ஜனா­தி­ப­திக்கு தெளிவுபடுத்தி அதற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றைக் கையளித்தேன், அதன் பிரதி ஒன்றை பிரதமருக்கும் வழங்கினேன். மேலும் ஊடகங்களுக்கும் பிரதிகளை வழங்குவதாக இருவரிடமும் தெரிவித்தேன்.

நான் சொல்லும் விட­யங்­க­ளுக்கு செவி­ம­டுக்­க­ வேண்­டி­ய­வர்கள் மௌன­மாக இருப்­ப­தா­லேயே கடை­சி­யாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகிய இருவருக்கும் அறி­விக்­க ­வேண்டும் என்ற எனது கட­மையின் அடிப்­ப­டையில் இந்த கடி­தத்தை நான் ஒப்­ப­டைத்தேன்” எனவும் முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்