இந்தியாவிடம் மீண்டும் தர்ம அடிவாங்கிய இலங்கை!- பல்­லே­கலவில் ரசிகர்கள் குழப்பம்!

இந்தியா-இலங்கை இடையிலான 3 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரினைக் கைப்பற்றியது.கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நேற்று பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக திரிமான 80 ஓட்டங்களையும், இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.இதையடுத்து 218 என்ற வெற்றியிலக்கிகை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 218 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், தொடக்க வீரார் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 124 ஓட்டங்களை பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய போவதை அறிந்த இலங்கை அணி ரசிகர்கள் தண்ணீர் போத்தல்களை கொண்டு மைதானத்திற்கு தூக்கியெறிந்தமையால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டிருந்தது.

 

மைதானத்திற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பின்னர் ரசிகர்கள் மைதானத்தினை விட்டு வெளியேற்றிய பின் போட்டி திரும்பி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்