காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 28 பேர் பரிதாப மரணம்!

காபூலின் மசூதி அருகே ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் 28 பேர் பரிதாபமாக மரணமாகியிருக்கிறார்கள்.

நேற்று நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரழந்தவர்களை, சவப் பெட்டிகளில் உறவினர்கள் இன்று தூக்கிச் சென்று புதைத்த காட்சி பலரது மனங்களையும் உருக வைத்துள்ளன.

ஆபுகானிஸ்தானின் இஸ்லாமிக் ஸ்டேட் குழுவினர் தாம் இத் தாக்குதலை நடாத்தி உள்ளதாக கூறி இருக்கிறார்கள்.எமாம் சமான் மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியில் நால்வர் இத் தாக்குதலை நடாத்தி இருக்கிறார்கள். இத் தாக்குதலில் 50 பேர் வரையில் காயமடைந்திருக்கிறார்கள்.

உரிமை கோரப்படாத பல இரத்தம் தோய்ந்த செருப்புகள், பரவிக் கிடந்த பெண்களின் முகத்திரைகள் , இங்கு நடந்துள்ள கொடுமைகளை படம்பிடித்துக் காட்டியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்