தாத்தாவுடன் சேர்ந்து தமது சொந்தப் பிள்ளைகளையே வல்லுறவுக்குள்ளாக்கிய தகப்பனுக்கு 335 வருட கடூழியச் சிறை!

சுமார் 19 வயது இளம்பெண் மற்றும் 14 வயதுடைய அவருடைய சகோதரி ஆகிய இருவரையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக அவர்களின் சொந்த தாத்தா, அப்பா மற்றும் இரு உறவுக்காரர்களாகிய நால்வருக்கும் இன்று கோலம்பூரின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மொத்தம் 335 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 24 பிரம்படிகளும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
தாத்தாவின் மீது 6 குற்றச்சாட்டுகளும், தந்தையின் மீது 2 குற்றச்சாட்டுகளும், 26 வயதுடைய உறவுக்காரரின் மீது ஒரு குற்றச்சாட்டும், 28 வயதுடைய மற்றொருவரின் மீது முதல் சகோதரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காக 2 குற்றச்சாட்டும் அவளின் தங்கையையும் மானபங்கம் படுத்தியதற்காக மேலும் 2 குற்றச்சாட்டுகளும் இன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன.

அவர்கள் அனைவரும் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். சம்பந்தப்பட குற்றவாளிகளின் மீது குற்றவியல் சட்டம் 376 பி(1) என்ற பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அவை நிருபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த இரு சகோதரிகளில் 19 வயதுடைய அக்கா தற்போது 25 வார கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தங்களின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகத நிலையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தங்களுக்கு குறைந்தபட்சத் தண்டனையை வழங்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், அவர்களுக்கு கண்டிப்பாக கடுமைமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நோர் அஸாரி யூசோஃ கேட்டுக் கொண்டார்.
பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களே, இப்படி அசிங்கமான செயலில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அப்பெண்ணின் தாத்தா, அப்பா, மற்றும் ஒரு உறவுக்காரர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு உறவுக்கார நபருக்கு முதல் 2 குற்றச்சாட்டிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அடுத்த 2 குற்றச்சாட்டுகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கோலம்பூரின் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்