ஜப்பானில் இறுதிச் சடங்குகளை செய்யும் பூசாரியாக பரிணாமித்துள்ள புதிய வகை ரோபோ!

நவீன உலகில் வேகமான தொழில்நுட்ப வளச்சியின் முக்கிய பரிமாணமான ரோபோக்கள் இப்போது உலகெங்கிலும் பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றன.

ஹொட்டல்களில் வரவேற்பாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், சத்திரசிகிச்சைக் கூடத்தில் மருத்துவர்களாகவும், ஏன் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளர்களாகவும், அண்டவெளியில் உள்ள கோள்களில் வலம் வந்து அங்குள்ள தகவல்களை பூமிக்கு அனுப்பும் துரித செயற்பாட்டளர்களாகவும் ரோபோக்கள் வலம் வருகின்றன.

அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று தமது புதிய வகை கண்டுபிடிப்பான ரோபோவை மனிதர்களின் இறுதிச் சடங்குகளை செய்யும் வேலைக்கு பயன்படுத்தியிருக்கின்றது.

புத்த மத கோட்பாடுகளின் அடிப்படையில் இறுதிச்சடங்கை செய்து முடிக்கும் ரோபோவுக்கு பெப்பர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

டோக்கியோ சர்வதேச கண்காட்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோ, பூசாரிகளின் தேவைகளை நிறைவுசெய்யுமென நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிச்சியோ நாமுரா கூறியுள்ளார்.

மேலும் பூசாரிகளுக்கு செலவிடப்படும் தொகையும் இதனால் வெகுவாகக் குறையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்