வனப் பாது­காப்பு பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழ் வேலைவாய்ப்பு!

­

———வனப் பாது­காப்பு, பொலிஸ் திணைக்­க­ளங்­களில் ஆட்­சேர்ப்­புக்கு விண்­ணப்பம் கோரல்———

வனப் பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் வன விரி­வாக்கல் உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு ஆட்­சேர்ப்புச் செய்­வ­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை சேவையில் உப பொலிஸ் பரி­சோ­தகர், பொலிஸ் (கான்ஸ்­டபில்) கொஸ்­தாபல், பெண் பொலிஸ் கொஸ்­தாபல் (கான்ஸ்­டபில்) ஆகிய பத­வி­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

என பதுளை மாவட்ட  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும்   மலை­யக மக்கள் முன்­ன­ணியின் நிதிச்­செ­ய­லா­ள­ரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மான அ. அர­விந்த குமார் தெரி­வித்­துள்ளார்.

இப்­ப­த­வி­க­ளுக்­கான கல்வித் தகை­மைகள் மற்றும் தகு­திகள் அதி­க­ளவில் மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு இருப்­பதால் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்­டு­மென  கேட்­டுக்­கொள்­வ­தாகத் தெரி­வித்­துள்ளார்.

வன விரி­வாக்கல் உத்­தி­யோ­கத்தர் பத­வி­க­ளுக்கு ஆட்­சேர்ப்­புக்­கான திறந்த போட்டிப் பரீட்சை – 2016 (2017)

கல்­வித்­த­கைமை  – கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சையில்; தமிழ், கணிதம் மற்றும் விஞ்­ஞானம் உட்­பட நான்கு பாடங்­களில் திற­மைச்­சித்­தி­யுடன் ஒரே தட­வையில் 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர தரப் பரீட்­சையில் ஆகக் குறைந்­தது ஒரு பாடத்­தி­லா­வது சித்­தி­ய­டைந்­தி­ருத்தில் வேண்டும்.வய­தெல்லை – 18 வய­துக்கு குறை­யா­மலும் 30 வய­திற்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். 

விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் முடி­வுத்­தி­கதி 28.02.2017 ஆகும். பரீட்சைக் கட்டணம் 600 ரூபா ஆகும். இந்தக் கட்­ட­ணத்தைப் பரீட்சை ஆணை­யாளர் நாய­கத்தின் வரு­மா­னத்­த­லைப்பு 2003-02-13இன் கீழ் அர­சாங்க வரு­மா­னத்தில் வரவு வைத்து 2017.02.28 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்னர் நாட்­டி­லுள்ள எந்­த­வொரு அஞ்சல் அலு­வ­ல­கத்­திலும் அல்­லது உப அஞ்சல் அலு­வ­ல­கத்­திலும் செலுத்­தலாம்.

மேற்­கு­றிப்­பிட்ட கட்­ட­ணத்தைச் செலுத்திப் பெற்­றுக்­கொண்ட உரிய பற்­றுச்­சீட்டை விண்­ணப்­பத்தில் உரிய இடத்தில் கழ­றா­த­வாறு ஒட்­டுதல் வேண்டும். இந்த பற்­றுச்­சீட்டின் நிழற்­படப் பிர­தியை விண்­ணப்­ப­தாரி தம்­வசம் வைத்­துக்­கொள்ளல் அவ­சி­ய­மா­ன­தாகும். விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் முடி­வுத்­தி­கதி 28.02.2017 ஆகும்.

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை “பரீட்சை ஆணை­யாளர் நாய­கம், பரீட்சை திணைக்­க­ளம், ஏற்­பா­டுகள் மற்றும் வெளி­நாட்டுப் பரீட்சைப் பிரி­வு, இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளம், த.பெ.இல. 1503, கொழும்பு” என்ற முக­வ­ரிக்கு அனுப்­பப்­படல் வேண்டும்.

அனுப்­பப்­படும் விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ வன விரி­வாக்கல் உத்­தி­யோ­கத்தர் பத­வி­க­ளுக்கு ஆட்­சேர்ப்புச் செய்­வ­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை  – 2016(2017)”எனக் குறிப்­பிட்டு பதி­வுத்­த­பாலில் 2017.02.28 ஆந் திக­திக்கு அல்­லது அதற்கு முன்­ப­தாக விண்­ணப்­பப்­ப­டி­வங்­கள் அனுப்­பப்­படல் வேண்டும்.

உப பொலிஸ் பரி­சோ­தகர் பதவி  – விசேட அதி­ர­டிப்­படை

கல்­வித்­த­கைமை  – கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்­பட  நான்கு பாடங்­களில் திறமைச் சித்­தி­க­ளுடன் ஒரே தட­வையில் 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். அத்­துடன் கல்வி பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்­சையில் ஒரே தட­வையில் 3 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும்.

இப்­ப­த­விக்கு ஆண்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கலாம். உடற்­த­கை­மைகள் :- உயரம் ஆகக் குறைந்­தது 5 அடி 6 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும். மார்பின் சுற்­ற­ளவு 32 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும். வய­தெல்லை  – 18 வய­துக்கு குறை­யா­மலும் 25 வய­திற்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் முடி­வுத்­தி­கதி 10.03.2017 ஆகும்.

பொலிஸ் கான்ஸ்­டபில் விசேட அதி­ர­டிப்­படை 

கல்­வித்­த­கைமை  – கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்­பட இரண்டு தட­வைக்கு மேற்­ப­டாமல்  குறைந்­தது 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். இப்­ப­த­விக்கு ஆண்கள் மாத்­திரம்  விண்­ணப்­பிக்­கலாம். உடற்­த­கை­மைகள் :-  உயரம் ஆகக் குறைந்­தது 5 அடி 4 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும். மார்பின் சுற்­ற­ளவு 30 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும். வய­தெல்லை  – 18 வய­துக்கு குறை­யா­மலும் 25 வய­திற்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் முடி­வுத்­தி­கதி 10.03.2017 ஆகும்.

பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் விசேட அதி­ர­டிப்­படை 

கல்­வித்­த­கைமை கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்­பட இரண்டு தட­வைக்கு மேற்­ப­டாமல்  குறைந்­தது 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். இப்­ப­த­விக்கு பெண்கள் மாத்­திரம்  விண்­ணப்­பிக்­கலாம். உடற்­த­கை­மைகள் :- உயரம்  ஆகக் குறைந்­தது 5 அடி 4 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும். வய­தெல்லை  – 18 வய­துக்கு குறை­யா­மலும் 25 வய­திற்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் முடி­வுத்­தி­கதி 10.03.2017 ஆகும்.

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை “ பணிப்­பாளர்  (ஆட்சேர்ப்பு),   பயி­லுநர் ஆட்­சேர்ப்பு அலு­வ­லகம் இல. 375  1ஆம்  மாடி, ஸ்ரீ சம்­புத்­தத்வ ஜயந்தி மாவத்தை  கொழும்பு – 06 என்ற முக­வ­ரி­யிட்டு,  விண்­ணப்­பப்­ப­டிவம்  அனுப்­பப்­படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் தாங்கள் விண்­ணப்­பிக்கும் பத­வியை குறிப்­பிட்டு பதி­வுத்­த­பாலில் 2017.03.10 ஆந் திக­திக்கு அல்­லது அதற்கு முன்­ப­தாக விண்­ணப்­பப்­ப­டி­வங்­கள் அனுப்­பப்­படல் வேண்டும் என்­பதால் இவ்­வி­ட­யத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கால­தா­ம­த­மின்றி செயல்­படல் வேண்­டு­மென அன்­புடன் கேட்­டுக்­கொள்­கின்றேன். பொலிஸ் பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் திரு­ம­ண­மா­கா­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும்.

விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் ஹட்டன் தலைமைக் காரியாலயம் பதுளை பிராந்திய காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மாவட்ட காரியாலயங்களிலும் மலையக மக்கள் முன்னணியின் அனைத்து உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-–2224228,  052-–2223052,  055–-2229838,  055-–2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்