ஐ.பி.எல் வீரர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போகும் இலங்கையின் மருத்துவ ஜாம்பவான்!

ஐ.பி.எல் அணி ஒன்றுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக இலங்கை வைத்தியர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.பி.எல் குழு அமைப்பாளர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த ஐ.பி.எல் பருவத்தில் அணி ஒன்றுடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அணி எது? என்று இப்போது வெளிப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல் போட்டிகளுக்காக முழு நேரமாக இந்தியாவில் தங்கியிருக்க முடியாது எனவும் ஆனால் காயமடைந்த வீரர்களை சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த அற்புதமான வைத்தியர் என குறித்த வைத்தியரை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அழைப்பார் எனக் கூறப்படுகின்றது.

இரண்டு முறை சச்சினுக்கு சிகிச்சை அளிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக குறித்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

லசித் மலிங்க மற்றும் பல இலங்கை வீரர்கள் உட்பட, பல நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த வைத்தியர் சிகிச்சை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்