இலங்கையை சொந்த மண்ணில் சுருட்டியது இந்தியா!

 

இந்தியா மற்றும் இலங்கையில் அணிகளுக்கிடையே தம்புள்ள சர்வதேச மைதானத்தில் நேற்று (20) இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடி மாறு பணித்தது.அதனடிப்படையில் தனது முதலாவது இனிங்ஸில் 43.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

இதனை அடுத்து 217 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலங்கையின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இந்திய அணி வெறும் 28.5 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷிகர் தவான் ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களைப் பெற்றதோடு, அணியின் தலைவர் விராட் கோலி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் நாயகனாக 90 பந்துகளில் 132 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்ற ஷிகர் தவான் பெற்றுக்கொண்டார்.அதனடிப்படையில் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் பின்னர், போட்டியை கண்டுகளிக்க வந்த ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அடுத்து இரு அணிகளின் வீரர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு ஒரு சில நிமிடங்கள் வரை அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.அதன் பின்னர் பொலிசாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு, இலங்கை மற்றும் இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பப்பட்ட வைக்கப்பட்டது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (24) பல்லேகலவில் இடம்பெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்