வலைப்பயிற்சியில் தடுமாறிய டோனி!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்குத் தயாராகி வருகிறது இந்தியா. வலைப் பயிற்சியில் முன்னாள் கப்டன் டோனி ஈடுபட்டிருந்தபோது சில பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியதைக் காண முடிந்தது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஜம்மென்று வென்ற கையோடு அடுத்து ஒரு நாள் தொடரில் இலங்கையைச் சந்திக்கவுள்ளது இந்தியா. மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி தம்புள்ளவில் நடைபெறவுள்ளது. இதற்கான வலைப் பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர்.

வலைப் பயிற்சியில் டோனியும் ஈடுபட்டார். அப்போது அவர் சில பந்துகளை சமாளிக்கத் தடுமாறியதைக் காண முடிந்தது. ஆனால் ஆரம்பத்தில்தான் தடுமாறினார். அதன் பிறகு அடித்து ஆடினார்.

இந்திய – இலங்கை பந்து வீச்சாளர்கள் டோனிக்கு சில இந்திய வேகப் பந்து வீச்சாளர்களும், சில உள்ளுர் இலங்கைப் பந்து வீச்சாளர்களும் பந்து வீசினர். தொடக்க தடுமாற்றத்திற்குப் பின்னர் சாதாரண நிலைக்குத் திரும்பினார் டோணி.

டோனி நல்ல பார்மில் இருப்பதை இந்த பயிற்சி நடவடிக்கை காட்டியதாக இந்திய அணி நிர்வாகமும் திருப்தி தெரிவித்துள்ளது. சில அருமையான ஷாட்டுகளையும் கூட டோணி அடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தியதைப் போல, ஒரு நாள் தொடரில் டோனி அசத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரும் காத்திருப்பில் உள்ளனர்.

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்