மன்னாரில் கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு !இளம்விஞ்ஞானி A.J.சயித்

மன்னாரில் இருந்து இளம்விஞ்ஞானி A.J.சயித்”கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு”….தனது திறமையை நிரூபிக்க ஜேர்மனி பயணம்—–

மன்னார் மாவட்டத்தில் இருந்து இளம்விஞ்ஞானி கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு….தனது திறமையை நிரூபிக்க ஜேர்மனி பயணம்—-
ஓன்றை உணர்ந்து கொண்டேன் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் செல்வாக்கும் பணபலமும் தேவை என்பதை…..
உங்கள் கரங்களில் எனது வெற்றி பயணம்,,,,,,,,,,

தங்களைப்பற்றி—–
நான் எழுத்தூர் கிராமத்தில் எனது தந்தையார் அன்ரன் ஜிட்டேந்திரன் கணிதபாட ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் தாயார்A.J.துசியந்தி தம்பிமார்களான போல் பவித்திரன்-காலஞ்சென்ற) மைக்கல் நிரோஷன் வசித்து வருகின்றோம். நானும் எனது தம்பியும் சித்திவிநாயகர் தேசிய கல்லூரியில் உயர்தரம் கற்று வருகின்றோம்.

தங்களுக்கு இவ்வாறான எண்ணம் எப்படி உருவானது—-
நான் சிறுவயதில் இருந்தே சின்ன சின்ன கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துள்ளேன. எனது இந்த முயற்சிக்கெல்லாம் காரணம் எனது தந்தை தான் எனது தரம் ஒன்றிலே மின்சுற்று செய்ய காட்டித்தந்தார் இப்படியாக தொடர்ந்தபோது தரம் 06இல் கற்கும் போது கிறிஸ்மஸ் நேரம் பட்டாசு என்றால் எனக்கு ரெம்ப பிடிக்கும் அப்பா பட்டாசு வாங்கித்தாருங்கள் என்று கேட்டேன் இந்தா இந்தக்கணக்கை செய்து முடித்தால் ஒருபெட்டி பட்டாஸ் வாங்கித்தருவேன் என்று சொன்னார் கொஞ்ச நேரத்தில் இரண்டு பாடகணக்கை முடித்துக்கொடுத்து பட்டாஸ் பெட்டியை வாங்கினேன். அதன் பின் அப்பா நான் என்ன கேட்டாலும் கல்வி தொடர்பான பாடங்களை செய்தால் வேண்டித்தருவேன் என்று சொல்வார் நானும் செய்துமுடிப்பேன் அப்பாவும் வாங்கித்தருவார் இப்படியாக நான் 11 வயதிலே சாதாரணதரம் பரீட்சை எழுதி ஆங்கிலத்தில்-A கணிதத்தில்-C பெற்றேன் தொடர்ந்து பல கண்டுபிடிப்புக்கள்.

பெற்றோரிடம் கேட்டபோது உங்களின் மகனின் செயற்பாடு—-
இவன் சிறுவயதில் இருந்தே இப்படித்தான் ஒரு வயதாகும் போதே இவன் எதையாவது நோண்டிக்கொண்டிருப்பான் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைப்பான் வளர வளர முன்பள்ளியில் கொண்டு போய் விட்டால் எல்லப்பிள்ளைகளும் விளையாடும் இவன் மட்டும் எதையாவது தேடிக்கொண்டும் வயர்கள் ஏனையபொருட்கள் எடுத்து உடைத்து பார்ப்பான் பாடசாலை நிர்வாகம் இவனது செயற்பாடுகள் சரியில்லை கொழும்பில் தான் இவனது ஆரம்பக்கல்வி அங்கு சுத்தம் மற்றும் கல்விச்செயற்பாடுகள் அதிகம் பார்ப்பார்கள் இவன் செயற்பாடு அவர்களுக்கு உகந்ததாக இல்லை ஆசிரியர் ஒன்று சொன்னால் இவன் ஒன்று கேட்பான் வீதிகளில் கிடக்கின்ற பொருட்கள் எல்லாவற்றினையும் விட்டினுள் கொணர்ந்து குவிப்பான் அதில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் தகப்பனிடம் காட்டி விளக்கம் கேட்பான். இவரும் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்வார் எனக்கு கோபம் தான் வரும் அவனது படிப்பு குழம்பி விடும் என்று அன்று எமக்கு இவனுடைய செயற்பாடுகள் கோபமும் பயமமாகத்தான் இருந்தது இன்று அதுவே அவனதும் எங்களதும் அடையாளமாகவுள்ளது.

தங்களின் பாடசாலை செயற்பாடுகள் பற்றி—
நுண்ணுயிர் எரிபொருட்கலம்

இளம் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பின் முழுமையான விரிவாக்கம் இதோ……….
மன்னார் சித்திவிநாயகர் இந்துதேசியகல்லுரியில் கணிதப்பிரிவில் பயிலும் மாணவன் செல்வன் A.Jசயித்
சேதனச்சேர்வைகளை உக்கவைப்பதன் மூலம் உருவாகும் பச்சைவீட்டு வாயுக்களை தடுத்து அதற்கு பதிலாக மின்சாரத்தை உற்பத்தி செய்தல்
இன்று நாம் மின்சாராத்தினை உற்பத்தி செய்வதில் 30தசாப்த காலங்களை கடந்து வந்துள்ளோம் இக்காலப்பகுதியில் நாம் பாவனையில் ஏற்றுக்கொண்ட சக்தி வளங்களாக சூரியபடல்-காற்றலைகள் நீர்நிலைகள் போன்ற திறன் மிக்க சக்தி வளங்கள் காணப்படுகின்ற போதிலும் இந்த இளம் மாணவன் இவற்றிற்கு நிகரான மற்றும் இவற்றை விட திறன் மிக்க ஒரு சக்தி வளத்தை கண்டு பிடித்துள்ளான் இதை இவர் இருவருட கடும் ஆய்வுகளின் மூலம் பல இன்னல்களையும் தாண்டி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இதற்கு காரணமாக அவர் தனது பரிசோதனையில் பெற்ற சிறு சிறு பெறுபேறுகளைக்கூட புறக்கணிக்காமல் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்து கடும் முயற்சி செய்தமையினாலே சாதிக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணங்கிகளின் தொழிற்பாடு ஒன்றை மாற்றி அதன் DNA மூலக்கூறை மாற்றி வடிவமைத்தல் மூலம் அதனை மின்சக்தி உற்பத்தி செய்ய வைக்கலாம் என்பதே இவரது ஆய்வாகும்.

ஆனால் மண்ணில் இயற்கையாகவே மின்சாரத்தை தயாரிக்கும் நுண்ணங்கிகள் உள்ள போதும் அவை 10000-1எனும் மிககுறைந்த சதவீதங்களிலேயே காணப்படும் இதற்கான காரணம் இந்த நுண்ணங்கிகள் இனப்பெருக்குவதற்கான சூழ்நிலையை பிற நுண்ணங்கிகள் தடுப்பதினாலேயே ஆகும் இவரின் ஆய்வில் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகளை பிற நுண்ணங்கிகளை எதிர்த்து போராடும் நோயெதிர்ப்பு சக்தி போன்ற ஒரு DNA மூலக்கூறு வகையை அந்த நுண்ணங்கிகளுக்குள் செலுத்தி அதன் அளவை அதிகரிக்க வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்