ஏன் பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என்கிறார்கள் ? அதில் உள்ள ஆபத்துகள் தான் என்ன?

பன்றி இறைச்சியை உண்பதால் 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது அறிவியல் ரீதியாகவே நிரூபணமாகியுள்ளது. பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். ஆனால், ஆபத்துகள் அதிகம் என்று கூறப்படுகின்றது.

அது சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் “டேனியா சோலிய‌ம்” Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு நாடாப்புழு உருவாகின்றது.

இது மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. அது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை முற்றிலுமாக இழக்கக்கூடிய நிலை ஏற்படுகின்றது.

இதயத்தைச் சென்றடைந்தால் மாரடைப்பு உண்டாகிறது, கண்களைச் சென்றடைவதால் கண்பார்வையை இழக்கிறான், ஈரலைச் சென்றடைந்தால் ஈரல் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

அதுமட்டுமின்றி பன்றி இறைச்சியில் திரிசுரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயருடைய மற்றுமொரு ஆபத்தான குடற்புழு உள்ளது, இந்த குடற்புழு டேனியா சோலிய‌ம் குடற்புழுவுக்கு ஒப்பானது. இதற்காகவே பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என வாதிடுகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்