இரண்டு இலங்கை தமிழர்களை தொடர்ந்து 3 வதாக இந்திய திரைப்படத்தை தயாரித்த சிங்களவர்!!

இந்தியர்கள் இலங்கையில் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையின் சிங்களவர் ஒருவர் முதன்முறையாக இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இரத்தினபுரியை சேர்ந்த விமுக்தி ஜெயசுந்தர என்பவரே இவராவார். இவர், பெங்காலி மொழியிலான சாட்ரக் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏற்கனவே மட்டக்களப்பை சேர்ந்த பாலு மஹேந்திரா வீடு மற்றும் தலைமுறைகள் போன்ற திரைப்படங்களை தயாரித்தார். இதனையடுத்து புங்குடுதீவை சேர்ந்த வி சி குஹநாதன் மைக்கல்ராஜ் என்ற படத்தை தயாரித்தார்.

இந்தநிலையில் இலங்கையர்களில் மூன்வறாது ஆளாக, விமுக்தி இந்திய திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

ஓன்றரை மணித்தியாலத்துக்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் இந்திய நகர வாழ்க்கையை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் காட்சிகள் அண்மையில் இலங்கையில் காண்பிக்கப்பட்டன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்