அமெரிக்காவிற்கு விசா இன்றி இலங்கையர்கள் செல்ல முடியுமா -உங்கள் சந்தேகங்கள் தீர இதை முழுமையாக வாசியுங்கள் !!

 

விசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்கா செல்ல முடியுமா?என்ற சந்தேகம் அநேகர்களுக்கு இப்போது வன்தொஇருக்கும் .ஏனென்றால் அடையாளம் இல்லாத சில இணைய ஊடகங்கள் அப்பிடித்தான் செய்திகளை பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது .

வீசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முடியும் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் என்ற இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சமாக 180 நாட்கள் வரை இலங்கையர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.

அத்துடன், 180 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு வீசா பெற்றுக்கொள்வது கட்டாயம் எனவும் அந்த ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியி கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, இலங்கை இராஜதந்திரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வர்த்தகம், மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் என அந்த சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், வீசா இல்லாமல் இலங்கையர்கள் அமெரிக்கா செல்லலாம் என வெளியான அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்