சிவப்புநிறமாக மாற்றமடையும் யாழ்ப்பாண ஆரியகுளத்து நீர்

யாழ்ப்பாண நகரில் உள்ள ஆரியகுளத்தின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த நிலை எற்பட்டுள்ளதா? என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
குளத்தில் பெருமளவு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இது தொடர்பில் யாழ்  மாநகர சபையினர் எதுவிதமான நடவடி க்கைகளையும் மேற்கொள்ளவில்லை.  யாழ்ப்பாண நகரில் சில நீர்நிலைகளே உள்ளன. அவற்றினை பேணிப்பாதுகாப்பது மற்றும்  சுத்திகரிப்பது  தொடர்பாக யாழ் மாநகர சபையினர் அக்கறை செலுத்துவதில்லை.
ஆரிய குளத்தின் நீர் கடந்த சில நாட்களாக சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இவ்வாறு நிறம் மாறியமைக்கான காரணம் என்ன? என்பது பற்றி யாழ் மாநகர சபை அதிகாரிகளோ அல்லது  யாழ் மாநகர சபையின் சுகாதார துறையினரோ இதுவரை ஆராய முன்வரவில்லை.
இந்த மாற்றத்தால் நிலத்தடி நீர் மாசுபடக்கூடிய அபாயம் உள்ளது. எனவே கழிவுப் பொருட்களை குளத்தில் கொட்டுவதால் தான் இந்த மாற்றம் நிகழ்கின்றது என்பது பற்றி ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில்  யாழ் ஆரியகுளம் சந்தியில் உள்ள நாகவிகாரை விடுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதால்   துர்நாற்றம் வீசுவதாக உதயன் இணையத்தளம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து அவ் வாய்க்கால் யாழ்  மாநகர சபையினரால் துப்பரவு செயப்பட்டிருந்தது. ஆயினும் மீண்டும் கழிவுகள் கொட்டப்படுகின்றன இந்த வாய்க்கால் வழியே செல்லும் கழிவுநீர் குளத்தினை மேலும் மாசுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்