ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளையோருக்கான மாநாடு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார, இளைஞர் அணி செயலாளர் எரிக் வீரவர்த்தன, கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் மாநாட்டில் நல்லிணக்கம், சுகாதாரம் உட்பட்ட 10 விடயங்கள் அடங்கிய மஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு கையளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்