புகையிரத நிலையத்திற்கு முன்பாக டிப்பர் பேருந்துடன் மோதியது .!

டிப்பரொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் அளவில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னால் வந்த டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துடன் மோதியுள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 36 வயதான நடேசபிள்ளை கமலாகரன் என்ற கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நபரும், டிப்பர் சாரதி 38 வயதான றோபேட் சந்திரகுமார் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்