இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை

2017 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளைய தினம் அதிகாலை 4.04 மணிக்கு ஏற்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் நட்சத்திரம் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சந்திரன் மறையும் நேரத்தில் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. மேற்கு வானத்தில் சந்திரன் மறையும் போது அதிகாலை 4.04 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் முற்பகல் 8.30 மணி வரை இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்