பெண்கள் தங்களின் ஒவ்வொரு பருவ வயதுகளில் சந்திக்கும் பிரச்சினைகள் !!

 
ஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும்.

அந்த வகை மாற்றத்தின் அடிப்படையில், பெண்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப் படுகின்றனர். அந்த குழுக்களில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றத்தை பற்றி காண்போம்.

பெண்களின் முதல் வகை

பெண்கள் முதல் குழுவில் 12- 28 வயது வரை உள்ளவர்கள். இந்த வகையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகப்பரு, ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த சோகை, முகத்தில் முடி மற்றும் தைராய்டு கோளாறுகள் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப் படுகின்றனர்.

ஏனெனில் இந்த வயதிற்குட்பட்ட பெண்கள் பெரும்பாலும் சமூக தளத்தில் அதிக நேரம் செலவழிப்பதால், தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைக்கு ஆளாகின்றார்கள்.

பெண்களின் இரண்டாம் வகை

பெண்கள் இரண்டாம் வகையில் 28-47 வயது வரை உள்ளவர்கள். இந்த வகை பெண்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலையை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.

இதனால் இவர்கள் அதிக களைப்பு, வீக்கம் அடைந்த நார்த் திசுக் கட்டிகள், பருத்து சுருண்ட நரம்புகள், மூட்டு பிரச்சனைகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களின் மூன்றாம் வகை

பெண்கள் மூன்றாம் வகையில் 50 வயதிற்கு மேல் இருப்பார்கள். இந்த வகையில் உள்ள பெண்கள் ஹார்மோன்கள் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

ஏனெனில் இந்த வயதில் இவர்களுக்கு மாதவிடாய் நின்று, மன அழுத்தம், மூட்டு வலி, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் ஏற்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்