தமிழர்களுக்கானகுரல்களில் ஒன்று அணைந்துவிட்டது. அங்கஜன் இராமநாதனின் இரங்கல் செய்தி

உலகம் எங்கும் ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் தங்கள் உரிமைகளைப்பெற்று வாழ்வதற்காக ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தகுரல்களில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் குரல் பெறுமதிமிக்கதொன்றாகும்.

ஆனால் தமிழர்களின் சாபமோ என்னமோ இன்று அந்தக்குரலைஇளந்து நாம் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.

காலாகாலமாக இன அடக்குமுறைகளை ஏகாபத்தியங்கள் தமிழர்மீது திணித்தபோது செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் குரல் அந்த ஏகாபத்தியங்களுக்கெதிராக ஒலிக்கத்தவறியதில்லை.

எமது ஈழத்து சொந்தங்கள் தமிழகத்தில் தஞ்சம் கோரியபோதும் அந்தசொந்தங்களை மரியாதையுடன் நடத்தியவர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள். இவரின் இழப்பானது இந்தியத்தமிழருக்குமாத்திரமன்றி ஈழத்தமிழர்களுக்கும் பாரியதொரு இழப்பாகும்.

அன்னாரது ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ( யாழ்ப்பாணம்,கிளிநொச்சிமாவட்டம்)

received_1159499760830699

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்