யாழில் யாழ்தேவி ரயிலுடன் ஜீப் வண்டி மோதி பாரிய விபத்து -ஸ்தலத்திலேயே ஒருவர் கோரப்பலி !!

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன், இராணுவத்தின் ஜீப் வண்டி மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 09.22 மணியளவில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவசிப்பாய்கள் சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம், வருகின்றதென சமிக்ஞை போடப்பட்டிருந்த நிலையிலும், புகையிரத கடவையினை கடந்துசெல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்