பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்ற இலங்கையர்

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்த்தன மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ஹம்ப்செயர் வடகிழக்குத் தொகுதியில், ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட 37,754 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளருக்கு 9,982 வாக்குகளே கிடைத்தன.

2015ஆம் ஆண்டு இதே தொகுதியில் ரணில் ஜெயவர்த்தன, சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவருக்கு 35,573 வாக்குகள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்