நாட்டிலுள்ள சகல சமயஸ்தலங்களுக்கும் சூரிய ஒளியில் மின்சாரம்!!

நாட்டிலுள்ள சகல சமயஸ்தலங்களுக்கும் சூரிய ஒளியில் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்டங்களில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடம்கஸ்லந்த ரிதி விகாரைக்கு சூரிய ஒளியில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் இன்று (08) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்