ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்வாழ்த்துக்கள் சகோதரா!!

ஐ.பி.எல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் கணேசன் ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு பணி நிமிர்த்தம் ஜெர்மன் சென்ற வெங்கட்ராமன் கணேசன் அங்கு கிரிக்கெட்டை தொடர்ந்த நிலையில் தற்போது அந்நாட்டு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த வெங்கட்ராமன் கணேசன், “இதனை நான் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க வில்லை.

குடும்ப சூழல் காரணமாக 2006ஆம் ஆண்டு கிரிக்கெட்டை கைவிட நேர்ந்தது. இந்நிலையில், என்னுடைய குடும்பத்தின் ஆதரவுடன் ஜெர்மன் நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்க முடிந்தது.

கால் பந்து போட்டிகளில் ஆர்வம் காட்டும் ஜெர்மனியில், கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்காலம் இருக்கின்றது என்பதை உணர்ந்து தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டேன்.

எனது மாநில அணியான வெஸ்டன் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடி அதிக சதங்களை பெற்றுக்கொண்டேன். இதன் அடிப்படையில் தற்போது தேசிய அணியில் இடம்கிடைத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்