யாழ்.செயலகத்திலும் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

69ஆவது சுதந்திர தின நிகழ்வு  யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் தலைமையில்  இடம் பெற்றது.
இதில் யாழ்  மாவட்ட அரச அதிபர்,  முப்படையை சே்ந்த தளபதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் என பலர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமானது. யாழ் மாவட்ட அரச அதிபர்  தேசிய கொடியை ஏற்றிவைத்தார் . இதனைத்தொடர்ந்து பொலிஸார், முப்படையினர்,மாணவர் படையணி, பாடசாலை மாணவர்கள்  போன்றவர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்