இந்த 7 பொருளும் உங்க வீட்ல இருக்கா? மொதல்ல தூக்கி வெளில எறிங்க!

எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அதில் இடமே இல்லாதது போல் அடைத்து பொருட்களை வைத்திருப்போம். அவை நம்முடைய வீட்டையே குப்பையாக வைத்திருப்போம்.

அதுபோன்ற சில பொருட்களை அப்படியே சேகரித்து வைத்திருப்போம். அவை வீட்டையே அலங்கோலமாக்கிவிடும். அப்படி எல்லா வீடுகளிலும் இந்த பொருட்களை அப்படியே தான் போட்டு வைத்திருப்போம்.

தினமும் வாங்கும் நியூஸ் பேப்பர்களை அப்படியே போட்டு வைத்திருப்போம். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அவற்றை எடுத்து அப்புறப்படுத்தலாம்.

பல வருடங்களாக வாழ்த்து அட்டைகளை மட்கிப் போகும் வரை சேகரித்து ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அவற்றையும் முதலில் தூக்கி வீசத்தான் வேண்டும். நினைவுகள் மனதில் என்றுமே அழியாமல் இருந்தால் போதும்.

ஷாம்பு பாட்டில்கள் தீர்ந்து போனால் தூக்கி எறியும் பழக்கமே நமக்கு வருவதில்லை. நம் எல்லோருடைய வீட்டிலும் பாத்ரூமில் நிச்சயம் காலியான ஷாம்பு பாட்டில்களைப் போட்டு வைத்திருப்போம்.

வெளியே செல்லும்போது, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, அதை கீழே போடாமல் காலி பாட்டிலை கையிலே வீடு வரைக்கும் கொண்டு வந்துவிட்டு, வீட்டில் ஒரு மூலையில் குப்பையாகப் போட்டு வைத்திருப்போம். அவற்றை ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டுமேயொழிய திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. அதனால் முதலில் அவற்றை அப்புறப்படுத்துங்கள்.

உபயோகப்படாத ஹெட்போன், பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் வீட்டையே பாழாக்கிவிடும். அதையும் அகற்ற வேண்டும்.

எப்போதோ ஷாப்பிங் போன பில் போன்றவற்றை அப்படியே சேகரித்து வைப்பது கூடாது.

உபயோகப்படுத்திய மருந்து பாட்டில்கள், காலாவதியான மாத்திரைகளை அப்படியே போட்டு வைத்திருக்காமல் வெளியே தூக்கிப் போடுங்கள். அது வீட்டை அலங்கோலப்படுத்துவது மட்டுமல்லாது உடல்நலத்தையும் கெடுத்துவிடும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்