திருமதி மனோன்மணி சிவராஜா மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவராஜா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்மோகன்(ஜெர்மனி), கெளரி(இலங்கை), ரேணுகா(இலங்கை), சசிதரன்(சுவிஸ்), றஜினி(பிரித்தானியா), சிவாஜினி(பிரான்ஸ்), றமேஸ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம்(கோண்டாவில்), யோகேஸ்வரி(கோண்டாவில்), காலஞ்சென்ற அற்புதசிங்கம்(பிரித்தானியா), செல்வராணி(கோண்டாவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூமணி(கோண்டாவில்), காலஞ்சென்ற துரைராஜா(கோண்டாவில்), சரஸ்வதி(மட்டுவில்), சந்திரசேகரம்(கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கல்யாணி(ஜெர்மனி), விஜயேந்திரன்(இலங்கை), பூபாலசிங்கம்(இலங்கை), அமுதமலர்(சுவிஸ்), இரவிச்சந்திரன்(பிரித்தானியா), பரந்தாமன்(பிரான்ஸ்), தீபா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிவேதன், நவீனன்(ஜெர்மனி), காலஞ்சென்ற திவ்யா, அயந்தன், சயந்தன், சயந்தினி, கயந்தினி(இலங்கை), நிசாந்தினி கயரூபன், தர்சிகா நிதுசன், நிலாஜினி(இலங்கை), அட்சயா, சாரீரன்(சுவிஸ்), சாருகா, துசிக்கா(பிரித்தானியா), அகல்யன், அனித்தா, அனந்திகா(பிரான்ஸ்), விதுசா, றுக்சா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாய்கேசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் நாவற்குழி பிணமுருங்கை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
தொலைபேசி: +94767417537
செல்லிடப்பேசி: +94773127236

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்