கட்டுநாயக்காவில் திடீரெனத் தரையிறங்கிய விமானம்..! ஆபத்தான நிலையில் பயணி..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவுதியில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த நிலையில், அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.குறித்த விமானத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதன்போது மற்றுமொரு பயணி நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.எனினும், வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த பயணி இன்னமும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.அவர் பக்டீரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்