ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டாபயவின் திட்டம்… !! ஆட்சேர்ப்பு முறை குறித்தும் விளக்கம்..!

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.அந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்பு முறை மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளன.குறைந்த வருமானம் பெரும் சமூர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தகுதி பெற்றிருந்தும் சமூர்த்தி உதவி கிடைக்காத குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை கட்டியெழுப்புவது இந்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் நோக்கமாகும்.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதியிலும் சுமார் 300-350 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பிரதேசத்திலுள்ள விஹாரதிபதி, பிற மத தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவகர்களின் மேற்பார்வையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.தேர்வின் சரியான தன்மையை மேலும் உறுதிப்படுத்த பாதுகாப்பு படையினரில் திறமையான பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தகுதியான பயனாளிகள் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் கல்வியறிவு தேவைப்படாத வேலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். தச்சு, விவசாயம், மீன்வளம், வனவியல் மற்றும் பிற பகுதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் சேவை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.

அத்தகைய குடும்பங்களில் தொழிற் படையணிக்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் 6 மாத கால பயிற்சியின் பின்னர் நிலையான தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.எவ்வித கல்வித் தகைமைகளையும் கொண்டிராத அல்லது குறைந்த கல்வி மட்டத்தில் உள்ள பயிற்றப்படாதவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.மேலும், அவர்கள் வதியும் பிரதேசங்களிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்