தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்வதில் புதிய நடைமுறை

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருபவர்கள் தமது நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய நடைமுறையொன்று கொண்டு வரப்படவுள்ளது.

அந்த வகையில் தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின் இது குறித்து உரியவர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் தெரியப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொலைபேசிகளூடாக அறிவிப்பதற்காக குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் இந்த குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்