தைப்பொங்கல் தினத்தில் பானையில் அரிசியிட்டு பொங்கி வணங்கி நிற்க இது தான் உகந்த நேரமாம்…!!

உலகவாழ் இந்து மக்கள் அனைவரும் அறிய..

உத்தராயன புண்ய காலம்..தை மாதப் பிறப்பு…தைப் பொங்கலிட நல்ல நேரம்….நிகழும் விகாரி வருடம் மார்கழி மாதம் 29 ஆம் திகதி, அதாவது ( 14.01.2020 ) அன்று உலக இந்துக்களால் போகிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படுகின்றது. தைப்பொங்கல் தினத்திற்கு முந்தைய நாளான இன்று இந்தியாவில் வெகு உற்சாகமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.தை மாதம் 1 ஆம் திகதி அதாவது 15.01.2020 அன்று அமிர்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை மணி 9ற்கு மேல் 10 மணிற்குள் பொங்கல் பானை வைத்து, சூரிய பகவவானுக்கு பொங்குவது மகா உத்தமம். காலை மணி 11 தொடக்கம் 12 மணிக்குள்ளாகசூரிய ஓரையில் சூரிய நாராயண பூஜை செய்வதும் உத்தமம்…

முன்னதாக காலை 7:05 தொடக்கம் 9:00 மணி வரைக்கும், தொடர்ந்து நண்பகல் 12:00 மணி தொடக்கம் 1:30 மணி வரைக்கும் எம கண்டம் நிகழ்வதனால் மேற்சொன்ன நேரங்களில் நற்காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.அதே போல, மறு நாளான 16.1.2020 வியாழக்கிழமை காலை மணி ஆறு முதல் மணி ஏழு வரை பட்டிப்பொங்கல் கோபுபூஜை செய்து வணங்குவது உத்தமம். பசு கன்று காளைகளை புனித நீராட்டி பொட்டு வைத்து பூமாலைகள் சூட்டி, தீபம் காட்டி, பூஜித்து, உணவளித்து நமஸ்கரிக்கவும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்