இரவோடு இரவாக யாழ் நகரின் மத்தியில் திடீரெனத் தோன்றிய பௌத்த கொடி…!!

யாழ் நகரின் மத்திய பகுதியில் அனாமதேய நபர்களால் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டுள்ளது.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் இந்த கொடி நிறுவப்பட்டுள்ளது.வேறிடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களை மேடையாக்கி, இரும்புக் கம்பியில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. கொடியின் கீழ் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் அந்தப் பகுதி வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தபோது, நேற்று மாலையில் வர்த்தக நிலையங்களை பூட்டிய போது இது இருக்கவில்லையென்றும், இன்று காலையில் வந்தபோது கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்