அதிகாலை வேளையில் இலங்கையின் குட்டி லண்டனில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…!!

குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும்,நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது, வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்