நீராவியடிப் பிள்ளையாரில் இன்றே களைகட்டிய தைப் பொங்கல்..!!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று (14) தமிழர் திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தைப்பொங்கலை மன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று, பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றதுகாலை 8.30 மணிக்கு தலமூர்த்திகளுக்கான அபிசேகத்துடன் பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்தன.

நிகழ்வை முன்னிட்டு, அங்கு நூற்றிற்கும் அதிகமான பொலிசார் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.ஒலிபெருக்கு பாவனைக்கு ஆரம்பத்தில் அனுமதி மறுத்திருந்தபோதும், பின்னர் பொலிசார் அனுமதியளித்திருந்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்